1989-ல் ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது: எடப்பாடி பழனிசாமி பேட்டி
1989 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சட்டமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,
மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவது: 1989-ல் ஜெயலலிதா மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. கருணாநிதி முன்னிலையிலேயே தாக்குதல் நடைபெற்றது. அன்றைய திமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவை கடுமையாக தாக்கினார்கள்.
அப்போது திருநாவுக்கரசரும் கே.கே.எஸ் ஆரும் தடுத்தார்கள். தடுத்துக் கொண்டு இருந்த போது இப்போது இருக்கும் மூத்த அமைச்சர், ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்தார். ஜெயலலிதா மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அன்றைய தினத்தை கருப்பு நாள் என்று சொல்லலாம்" என்றார்.
Related Tags :
Next Story