சென்னை விமான நிலையத்தில் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட 2 புதிய 'லிப்ட்'


சென்னை விமான நிலையத்தில் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட 2 புதிய லிப்ட்
x

சென்னை விமான நிலையத்தில் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட 2 புதிய ‘லிப்ட்’ களை இயக்குனர் சரத்குமார் தொடங்கி வைத்தார்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம் புறப்பாடு, பன்னாட்டு முனையம் புறப்பாடு ஆகியவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட 2 புதிய 'லிப்ட்'கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை தரைத்தளம், வாக்கலேட்டர் தளமான முதல்தளம், புறப்பாடு பகுதியான 2-ம் தளம் ஆகியவற்றை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவை தரை தளம், முதல் தளம் மற்றும் 2-ம் தளங்களில் நின்று செல்லும். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையம், பன்னாட்டு விமான நிலையம் இடையே வாக்கலேட்டா்களில் செல்லும் பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் விமான நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வாக்கலேட்டரில் செல்லும் பயணிகளுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும்.

இந்த 'லிப்ட்'கள் 360 டிகிரியில் பாா்க்கும் வகையில் முழுவதும் கண்ணாடிகளால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனால் 'லிப்ட்'களில் விளக்குகள் இல்லாமலேயே ஒளி கிடைக்கும். திறந்த வெளியில் கண்ணாடி கூண்டுகளில் இயக்கப்படுவதால் பயணிகள் அச்சமின்றி 'லிப்ட்'டில் பயணிக்க முடியும். கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட 'லிப்ட்'கள் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன விமான நிலைய முனையத்திலும் நிறுவப்பட உள்ளன.

இந்த 2 புதிய 'லிப்ட்'களையும் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் பயணிகளின் பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.


Next Story