திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா


திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் மாணவியர் பேரவை தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியை உமாதேவி வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) க.சுப்புலட்சுமி கலந்து கொண்டு, கல்லூரி மாணவியர் பேரவை தலைவியாக 3-ம் ஆண்டு விலங்கியல் துறை மாணவி மு.ஷிவதர்ஷினி, துணை தலைவியாக 3-ம் ஆண்டு ஆங்கில இலக்கிய துறை மாணவி ஞா.மிஷ்மா ஸ்நோபியா, செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2-ம் ஆண்டு இயற்பியல் துறை மாணவி அ.ஜெப ஞான்ஸி மற்றும் அனைத்து துறை மாணவியர் பேரவை செயலாளர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் "வைய தலைமை கொள்" என்ற தலைப்பில் பேசினார். கல்லூரி மாணவ பேரவை தலைவி மு. ஷிவதர்ஷினி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை முதல்வரின் வழிநடத்துதலின்படி தமிழ்த்துறை பேராசிரியை கா.உமாதேவி, இயற்பியல் துறை உதவி பேராசிரியை காந்திமதி ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story