அரசு பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டி


அரசு பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டி
x

அரசு பள்ளி மாணவர்களுக்கு தடகள போட்டி நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசியில் அரசு பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி சாட்சியாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிவகாசி வட்டாரத்தில் உள்ள 19 அரசு பள்ளியில் படிக்கும் 465 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தடகள போட்டியை சிவகாசி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் தொடங்கி வைத்தார். ஜாகிர் உசேன் ஒலிம்பிக் கொடி, தேசிய கொடிகளை ஏற்றி வைத்தார். டேவிட் ஜெபராஜ் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். பின்னர் போட்டிகள் நடைபெற்றன. மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் தனித்தனியாக 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 100 மீ, 200 மீ, 400 மீ, 600 மீ, 800 மீ, 1,500 மீ ஓட்டப்பந்தயங்கள் நடைபெற்றன. மேலும் குண்டு எறிதல், வட்டு எறிதல், தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளும் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராபர்ட் கென்னடி பதக்கம், சுழற்கோப்பை ஆகிய பரிசுகளை வழங்கினார்.


Next Story