ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டு


ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டு
x

பொன்னமராவதியில் ஏ.டி.எம். கார்டை மாற்றி நூதன திருட்டிய தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் லெட்சுமணன் (வயது 39). இவர் கடந்த 7-ந் தேதி தனது மனைவி ஏ.டி.எம். கார்டினை கொண்டு வந்து பொன்னமராவதி பொன்-புதுப்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க வந்தார். அப்போது அங்கு ஒருவர் லெட்சுமணனுக்கு உதவுவது போல் ஏ.டி.எம்.கார்டை மாற்றி அவரிடம் கொடுத்துள்ளார். பின்னர் அந்த கார்டில் பணம் வரவில்லை என்று மனைவிக்கு செல்போனில் லெட்சுமணன் தகவல் கூறியுள்ளார். அப்போது அவரது மனைவி செல்ேபானுக்கு ரூ.40 ஆயிரமும், தனியார் செல்போன் கடையில் ரூ.20 ஆயிரமும் எடுத்து உள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளதாக கூறினார். இதையடுத்து லெட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று பொன்னமராவதி பஸ் நிலையத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு விதமாக நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், குளித்தலை கீழனங்கவரம் சுகுமார் மகன் சரவணக்குமார் (29), காஞ்சீபுரம் நன்மங்கலம் தங்கராஜ் மகன் தமிழ்ச்செல்வன் (28), இவரது மனைவி லெட்சுமி (27) என்பதும், லெட்சுமணன் ஏ.டி.எம்.கார்டை வைத்து பணத்தை திருடியதும் தெரியவந்தது. மேலும் 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.20 ஆயிரம், செல்போன் மற்றும் 40 போலி ஏ.டி.எம். கார்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story