கோவை சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா? தமிழக சிறைத்துறை விளக்கம்


கோவை சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா? தமிழக சிறைத்துறை விளக்கம்
x

கோயம்புத்தூர் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு சிறைவாசியும் சிறை பணியாளர்களால் தாக்கப்படவில்லை என்று கோவை சிறைத்துறை தெரிவித்துள்ளது.

கோவை,

கோவை சிறையில் யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை. மனித உரிமைகளை பேணுவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாக தமிழக சிறைத்துறை விளக்கமளித்துள்ளது. இது குறித்து தமிழக சிறைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'சமூக ஊடகங்களில் கோயம்புத்தூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கர் என்ற விசாரணை சிறைவாசி சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு சிறைவாசியும் சிறை பணியாளர்களாலோ அல்லது மற்ற சிறைவாசிகளாலோ தாக்கப்படவில்லை.

கோவை சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா? தமிழக சிறைத்துறை விளக்கம்தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சிறைவாசிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை பேணுவதிலும் சிறை விதிகளை கடைபிடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. எனவே இந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது' என தமிழக சிறைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story