அரசு பள்ளி ஆசிரியை மீது தாக்குதல்


அரசு பள்ளி ஆசிரியை மீது தாக்குதல்
x

சேலத்தில் தலைமுடியை பிடித்து இழுத்த மாணவனை அடித்த அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்

சேலத்தில் தலைமுடியை பிடித்து இழுத்த மாணவனை அடித்த அரசு பள்ளி ஆசிரியையை தாக்கிய கணவன்-மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவனுக்கு அடி

சேலம் தென் அழகாபுரம் ரெட்டியூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தென் அழகாபுரத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வகுப்பு ஆசிரியை ஒருவர் கையில் இருந்த சாக்பீஸ் கீழே விழுந்ததாகவும், அதனை அவர் எடுக்க முயன்றபோது அந்த மாணவன் ஆசிரியையின் தலைமுடியை பிடித்து இழுத்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, உடற்பயிற்சி ஆசிரியையான மகாலட்சுமியிடம் இதுபற்றி கூறினார். இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து கண்டித்து அடித்ததாக தெரிகிறது.

ஆசிரியை மீது தாக்குதல்

இந்த விவகாரம் மாணவனின் தந்தை தென் அழகாபுரத்தை சேர்ந்த சக்ரவர்த்தி (வயது 43) என்பவருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் நேற்று முன்தினம் ரெட்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்றார். அப்போது அவர் தனது மகனை அடித்த சம்பந்தப்பட்ட ஆசிரியை மகாலட்சுமியிடம் வாக்குவாதம் செய்ததோடு அவரை கன்னத்தில் தாக்கினார். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சேலம் மேற்கு தாசில்தார் அருள் பிரகாஷ், மாவட்ட கல்வி அலுவலர் மோகன் ஆகியோரும் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

கணவன், மனைவி மீது வழக்கு

இது தொடர்பாக அழகாபுரம் போலீஸ் நிலையத்தில் ஆசிரிைய மகாலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து ஆசிரியையை தாக்கிய மாணவனின் தந்தை சக்ரவர்த்தி, அவருடைய மனைவி பிரபாவதி உள்பட சிலர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story