ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
மயிலம் அருகே ஊராட்சி மன்ற தலைவரை 3 பேர் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விழுப்புரம்
மயிலம்,
மயிலம் அருகே முப்புலி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 49). ஊராட்சி மன்ற தலைவராவார். இவர் நேற்று தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டப்பணியை பார்வையிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை 3 பேர் கொண்ட ஒரு கும்பல் முன்விரோதம் காரணமாக வழிமறித்து சரமாரியாக தாக்கியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து சந்திரசேகர் மயிலம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோத தகராறில் ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story