நீர் பிடிப்பு நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முடிவு... தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்


நீர் பிடிப்பு நிலத்தை வீட்டு மனைகளாக மாற்ற முடிவு... தடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்
x

ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல் நடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சியில் தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தலைமையில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திருப்பத்தூர் பாபுசா நகரைச் சேர்ந்த மகேந்திரன் மகன் கர்ணன் மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்து கூட்டத்தை நிறுத்து என்று கூறி, ஆதியூர் பகுதி ஆத்துமேடு பகுதியில் தாங்கள் வாங்கி இருந்த மூன்று ஏக்கர் மனை பிரிவுகளாக மாற்ற தங்களிடம் கொடுத்து ஏன் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. பணத்தைப் பெற்றுக் கொண்டு எங்களுக்கு செய்யாமல் வேறு ஒருவருக்கு அனுமதி அளித்துள்ளீர்கள் எப்படி என கேட்டு தகராறு ஈடுபட்டனர்.

அப்போது ஊராட்சி மன்ற தலைவர், நீங்கள் அனுமதி கேட்ட பகுதி நீர்ப்பிடிப்பு பகுதி. யாரிடம் பணம் கொடுத்தீர்கள். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என கூறினர்.இதனால் ஆத்திரம் அடைந்த கர்ணன் மற்றும் சின்னத்தம்பி ஊராட்சி மன்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை மற்றும் பெண் வார்டு உறுப்பினர்களை கட்டை மற்றும் கல்லால் தாக்கியதாகவும் தடுக்க வந்த ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் மீதும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ஆத்திரம் அடைந்த பகுதி ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி இருவரையும் பிடித்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ஊராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பெண் உறுப்பினர்களை இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story