டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்


டிக்கெட் பரிசோதகர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 13 Sep 2023 7:45 PM GMT (Updated: 13 Sep 2023 7:46 PM GMT)

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம்

சூரமங்கலம்:-

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட் பரிசோதனை

நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16340) நேற்று நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்தது. இந்த ரெயிலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த டிக்கெட் பரிசோதகர் வினோத் குமார் (வயது 34) டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக ஏறினார். பின்னர் அவர் ஒவ்வொரு பெட்டியாக சென்று டிக்கெட் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ரெயில் நாமக்கல் அருகே வந்தபோது எஸ்-6 பெட்டியில் பயணம் செய்தவர்களிடம் டிக்கெட்டுகளை வாங்கி சரிபார்த்தார்.

அப்போது அந்த பெட்டியில் மதுரையில் இருந்து நாசிக் பயணம் செய்த சாங்லே (52) மற்றும் சிலரிடம் டிக்கெட் பரிசோதனை செய்தார். அதில் அப்பெட்டியில் முன்பதிவு செய்த டிக்கெட்டில் ஒருவர் பயணம் செய்யவில்லை என தெரியவந்தது. இதையடுத்து பயணம் செய்யாத நபரின் இருக்கையை வேறு ஒருவருக்கு ஒதுக்கீடு செய்ய டிக்கெட் பரிசோதகர் ஏற்பாடு செய்தார். இதற்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்குப்பதிவுநாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் பரிசோதகரை தாக்கிய வடமாநிலத்தை சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் டிக்கெட் பரிசோதகருக்கும், சாங்லேவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து டிக்கெட் பரிசோதகரை நாசிக்கை சேர்ந்த துக்காராம் (60), கோவர்தன் லால் (42), சாங்லே, கைலாஷ் சாங்லே (63) ஆகியோர் சேர்ந்து டிக்கெட் பரிசோதகர் வினோத்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அவர் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாலை 3.30 மணிக்கு ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. ரெயில்வே அதிகாரிகள், ெரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயிலில் ஏறி வினோத்குமாரை தாக்கிய 4 பேரை ரெயிலில் இருந்து இறங்குமாறு கூறினர்.

இதையறிந்து ரெயிலில் இருந்த நாசிக்கை சேர்ந்த 150-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் 4 பேரையும் ரெயிலில் இருந்து கீழே இறக்கிய சேலம் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு அதே ரெயிலில் அனுப்பி வைத்தனர்.. இதனால் நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் காலதாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதுகுறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின்பேரில் பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல், அடித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story