இந்து முன்னணி பிரமுகரின் காரை தீ வைத்து எரிக்க முயற்சி - கோவையில் தொடரும் பரபரப்பு...!


இந்து முன்னணி பிரமுகரின் காரை தீ வைத்து எரிக்க முயற்சி - கோவையில் தொடரும் பரபரப்பு...!
x

குனியமுத்தூரில் இந்து முன்னணி பிரமுகரின் காரை மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர்..

கோவை,

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தியாகு. இவர் இந்து முன்னணி அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

காரின் மேல் கவர் போடப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று பிற்பகலில் அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத நபர், காரின் மீது பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்துள்ளார்.

காரின் மீது தீ எரிந்த நிலையில், வீட்டின் உள்ளே இருந்த தியாகுவின் தாய் சாந்தாமணி வெளியில் வந்து கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்தனர்.

காரின் மேல்புறம் மற்றும் கண்ணாடி பகுதி உடைந்து சிறிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் காரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மர்மநபர்கள் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்துவருகின்றனர்.

இந்த சம்பவம் கோகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story