ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது


ஆடுகள் திருட முயற்சி; வாலிபர் கைது
x

களக்காடு அருகே ஆடுகள் திருட முயன்றதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீவரமங்கைபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமையா மகன் மாரி (வயது 22). ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் களக்காடு அருகே உள்ள சத்திரம் கள்ளிகுளத்தில் ஆட்டு கிடை அமைத்து, 100 ஆடுகளை பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்த தவமணி மகன் ரமேஷ் (37) என்பவர் மாரியிடம் சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். அவரும் தண்ணீர் கொடுத்தார். தண்ணீரை குடித்து விட்டு ரமேஷ் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் கிடைக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் கலைந்து ஓடின. மேலும் சத்தமும் எழுப்பின. இதனால் அதிர்ச்சி அடைந்த மாரி ஓடி சென்று பார்த்தபோது, ரமேஷ் ஆடுகளை திருட முயன்றதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த மாரி சத்தம் போட்டதால் ரமேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்தனர்.

1 More update

Next Story