ஈரோடு: ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி; அலாராம் அடித்ததால் பணம் தப்பித்தது..!


ஈரோடு: ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி; அலாராம் அடித்ததால் பணம் தப்பித்தது..!
x

புஞ்சை புளியம்பட்டி அருகே இன்று அதிகாலை மர்ம நபர் ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி, மாதம்பாளையம் ரோட்டில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியின் அருகிலேயே ஏடிஎம் மையம் உள்ளது. அதில் ஒரு பணம் எடுக்கும் இயந்திரம், பணம் டெபாசிட் செய்யும் இயந்திரம், வங்கி வரவுசெலவு கணக்கினை பிரிண்ட் செய்யும் இயந்திரம் ஆகியவை உள்ளது.

இன்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் ஹெல்மெட் அணிந்தபடி முகத்தை துண்டால் கட்டிகொண்டு எடிஎம் மையத்தின் முன்புறம் இருந்த கண்காணிப்பு கேமிராவை உடைத்துவிட்டு உள்ளே சென்றார். பின்னர் உள்ளே இருந்த இரண்டு கண்காணிப்பு கேமிராவை பேப்பர் கொண்டு மறைத்துவிட்டு ஏடிஎம் மெஷினை கடப்பாரையால் உடைத்து பணம் திருட முயற்சி செய்தான். அப்போது அலாரம் அடித்ததால் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான்.

இந்நிலையில் அலராம் அடித்த தகவல் அறித்து வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் எடிஎம் மையத்தை பார்த்தபோது கொள்ளை முயற்சி நடைபெற்றது தெரியவந்தது.

இதனையடுத்து கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளை முயற்சி குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஈரோட்டில் இருந்து வரவழைக்கபட்ட மோப்பநாய் ஜெர்ரி மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

கொள்ளை முயற்சி குறித்து வங்கி மேலாளார் சதீஷ் அளித்த புகாரின்பேரில் புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை சத்தியமங்கலம் டி.எஸ்.பி ஜெயபால் தலைமையிலான போலீசார் தேடி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story