தணிக்கத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு


தணிக்கத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி - நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
x

தணிக்கைத்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இன்று பேரணி நடைபெற்றது.

சென்னை,

தணிக்கைத்துறையின் வரலாறு மற்றும் தோற்றத்தைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 16-ந்தேதி தணிக்கை தினமாகவும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 16-ந்தேதி முதலான ஒருவாரம் தணிக்கை வாரமாகவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு தணிக்கைத்துறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சென்னை ராஜாஜி பவனில் தொடங்கி சுமார் 5 கி.மீ. வரை இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் தணிக்கைத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதன்மை கணக்காயர் அம்பலவாணன், தவறுகளை சுட்டிக்காட்டி, அவற்றை திருத்துவதே தணிக்கைத்துறையின் நோக்கம் என்று தெரிவித்தார்.


Next Story