ஆட்டோ-கார் மோதல்: டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம்


ஆட்டோ-கார் மோதல்:  டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம்
x

தேவதானப்பட்டி அருகே ஆட்டோ-மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டியை சேர்ந்தவர்கள் சசிகுமார் (வயது 27), முத்து முனியாண்டி (31), காமாட்சி (34), பகவதி (52), ஈஸ்வரி (24). இவர்கள் 5 பேரும் ஜெயமங்கலத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் சில்வார்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை அதே ஊரை சேர்ந்த காளிமுத்து (31) என்பவர் ஓட்டி சென்றார். தேவதானப்பட்டி- வைகை அணை மெயின் ரோட்டில் ஒத்தவீடு அருகே வந்தபோது, தேவதானப்பட்டியில் இருந்து ஜெயமங்கலம் நோக்கி சென்ற கார், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது.

இதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதையடுத்து படுகாயமடைந்த டிரைவர் காளிமுத்து உள்பட 6 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story