போலீஸ் கூண்டை உடைத்த ஆட்டோ டிரைவர் கைது


போலீஸ் கூண்டை உடைத்த ஆட்டோ டிரைவர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2023 2:30 AM IST (Updated: 23 Oct 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் போலீஸ் கூண்டை உடைத்த ஆட்டோ டிைரவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

தேனி பாரஸ்ட் ரோடு 11-வது தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் நந்தகுமார் (வயது 25). இவர் தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று இரவு நின்று கொண்டு அந்த வழியாக சென்றவர்களை ஆபாசமாக பேசி தகராறு செய்தார். அப்போது அவர் அங்கு இருந்த போக்குவரத்து போலீசார் நிற்கும் கண்ணாடி கூண்டை உடைத்து சேதப்படுத்தினார். மேலும் உடைந்த கண்ணாடி துண்டை கையில் வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற குறிஞ்சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பெருமாள் என்பவர் இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை நேற்று கைது செய்தனர்.

1 More update

Next Story