வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் போலீஸ் நிலையம் முன் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்


வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் போலீஸ் நிலையம் முன் மனைவியுடன் தீக்குளிக்க முயன்ற ஆட்டோ டிரைவர்
x

வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையம் முன் மனைவியுடன் ஆட்டோ டிரைவர் தீக்குளிக்க முயன்றார்.

சென்னை

சென்னை காசிமேடு ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 55). ஆட்டோ டிரைவரான இவர், 2020-ம் ஆண்டு கஞ்சா வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்களின் வங்கி கணக்குகள் போலீசாரால் முடக்கப்பட்டு வருகிறது. அதன்படி பாஸ்கரின் வங்கி கணக்கும் போலீசாரால் முடக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில் அவர், நேற்று ராயபுரம் பகுதியில் உள்ள வங்கியில் பணம் எடுக்க சென்றார். அப்போது வங்கி ஊழியர்கள், அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக கூறினர். இதனால் மனம் உடைந்த பாஸ்கர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீஸ் நிலையம் முன் தான் வைத்திருந்த பெட்ரோலை தன் மீதும், அவருடைய மனைவி வானதி மீதும் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர்.

உடனே அங்கிருந்த போலீசார், இருவரையும் தடுத்து தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார்கள். பின்னர் கணவன்-மனைவி இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

1 More update

Next Story