பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் ஓசோன் தினம் குறித்து விழிப்புணர்வு

பெத்தநாயக்கனூர் அரசு பள்ளியில் ஓசோன் தினம் குறித்து விழிப்புணர்வு
கோயம்புத்தூர்
பொள்ளாச்சி
உலக ஓசோன் தினமான செப்டம்பர்-16-ந்தேதியை முன்னிட்டு ஆனைமலை அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓசோன் தினம் குறித்த விழிப்புணர்வு நடந்தது. விழிப்புணர்வு நிகழ்வில், பசுமைப் படை மாணவர்கள் மற்றும் சுற்றுச்சூழலில் ஆர்வம் உடைய பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் விடுமுறை நாளிலும் விருப்பத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்து தாங்கள் வளர்த்து வருகின்ற 75 மரக்கன்றுகளுக்கு நீரூற்றியதோடு, ஓசோனை குறிக்கும் வேதிக் குறியீடு வடிவில் நின்று தங்களது மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story