பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
மனித-வனவிலங்கு மோதலை தடுப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின்படி, கீழ்கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கரிக்கையூர் கிராமத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் நேற்று யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் கீழ் கோத்தகிரி வனச்சரகர் ராம் பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் கலந்துகொண்டு மனித-வனவிலங்கு மோதல்கள், அதை தடுக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விளக்கி பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் கடசோலை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமை தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தொடங்கி வைத்தார். இதில் கடசோலை, சேலரை, செடிக்கல், பாம்பரை பழங்குடியின கிராம பொதுமக்கள், அரசு ஆரம்ப பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முகாமில் பங்கேற்ற பள்ளி குழந்தைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.