மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம்


மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 2 Oct 2023 12:15 AM IST (Updated: 2 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குடும்ப நலத்துறை சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.

திருவாரூர்

மன்னார்குடி:

குடும்பநலத்துறை சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் ஏ.ஆர்.ஜெ. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது. முகாமுக்கு கல்லூரியின் முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். இதில் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் குப்புசாமி, வட்டார சுகாதார புள்ளியியலாளர்கள் கவிதா, சங்கவி, கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவிகளின் உடல் நலம், சிறார் திருமணம் தடுப்பதற்கான வழிமுறைகள், இளம் வயதில் கர்ப்பம் ஏற்படுவதை தடுத்தல் பற்றி விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. முடிவில் மேலாண்மை பிரிவு துறை தலைவர் முகேஷ்வரன் நன்றி கூறினார்.

1 More update

Next Story