விழிப்புணர்வு பிரசாரம்


விழிப்புணர்வு பிரசாரம்
x

விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.

கரூர்

தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் இந்திய வாலிபர் சங்கம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான ஒரு கோடி கையெழுத்து இயக்கம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாவட்ட செயலாளர் முத்துசெல்வன், மாவட்ட துணைச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக கரூர் மாவட்ட விவசாய சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் கலந்து கொண்டு பேசினார். ஆர்.டி.மலை பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய பிரசாரம் முக்கிய வீதிகள் வழியாக சென்று தோகைமலை பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. தோகைமலை அரசு மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் பணியாற்றும் மருத்துவர்களை நியமிக்க வேண்டும், தோகைமலை பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க தொழிற்சாலை அமைக்க கூறியும், கீழவெளியூரில் தாய் சேய் நல விடுதி உடனடியாக கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு பள்ளிகளில் மாணவ - மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.


Next Story