விழிப்புணர்வு பேரணி


விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 8 Oct 2023 12:30 AM IST (Updated: 8 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குருவிகுளம் பகுதியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தென்காசி

திருவேங்கடம்:

திருவேங்கடம் தாலுகா குருவிகுளம் ஒன்றியம் தெற்கு அய்வாய்புலிப்பட்டி கிராமத்தில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தெற்கு அய்வாய்புலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம் சரஸ்வதி தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காமாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரிய பயிற்றுனர் சுவலட்சுமி வரவேற்று பேசினார்.

இதில் புதிய பாரதம் எழுத்தறிவு திட்டத்தில் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியானது ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. முடிவில் ஆசிரியர் சுபலட்சுமி நன்றி கூறினார்.





Next Story