மின் சிக்கன விழிப்புணர்வு பேரணி
நெல்லையில் மின் சிக்கன விழிப்புணர்வு பேரணியை உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்
நெல்லை மின் பகிர்மான வட்டத்தின் சார்பில் நெல்லை மாவட்டத்தில் மின்சார சிக்கனம் குறித்து பொதுமக்கள், மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து மின்சார சிக்கன விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி தலைமை தாங்கினார். நகர்ப்புற கோட்ட செயற்பொறியாளர் வெங்கடேஷ் மணி வரவேற்று பேசினார். நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முடிவில், உதவி செயற்பொறியாளர் சங்கர் நன்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வகுமார், செயற்பொறியாளர்கள், கற்பகவிநாயகசுந்தரம், ஜான் பிரிட்டோ, உதவி செயற் பொறியாளர்கள் முத்துசாமி, சின்னசாமி, சைலஜா, கலா ராஜகோபால், தங்க முருகன், ராஜசேகர், குத்தாலிங்கம், உதவி மின் பொறியாளர்கள் அபிராமிநாதன்சரவணன், அருணன், சரவணகுமார், முருகன், சரவணன், ஜெனட் மல்லிகா மற்றும் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.