டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பேரணி


டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 5 Oct 2023 7:15 PM GMT (Updated: 5 Oct 2023 7:15 PM GMT)

ஏரிப்பட்டி அரசு பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.

கோயம்புத்தூர்
பொள்ளாச்சி அருகே உள்ள ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை சுகந்தி தலைமை தாங்கி, பேரணியை தொடங்கிவைத்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கவிதா பேசினார். அப்போது அவர் கூறுகையில், மழைநீர் வீடுகளில் உள்ள ஆட்டுக்கல், டயர்கள், குளிர்சாதனபெட்டிகளில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கண் வலி, மூட்டு வலி, தலைவலி பேன்ற அறிகுறிகள் இருந்தால் டாக்டரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் டெங்கு பராவாமல் தடுக்க சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். மேலும் வீடுகளில் தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இதுகுறித்து மாணவ- மாணவிகள் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். பேரணியில் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மாணவ-மாணவிகள் சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி பள்ளிக்கு வந்து நிறைவடைந்தது. இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story