மானாமதுரையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி


மானாமதுரையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி
x
தினத்தந்தி 23 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 10:55 AM GMT)

மானாமதுரையில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை ரெயில்வே போலீசார் சாா்பில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணியை சப்-இன்ஸ்பெக்டர்கள் தனுஷ்கோடி, முத்துப்பாண்டி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஒ.வெ.செ.பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி பள்ளியில் தொடங்கி பழைய பஸ் நிலையம் வழியாக மானாமதுரை ரெயில் நிலையம் வரை வந்தடைந்தது. பின்னர் ரெயில் நிலையத்திற்கு போலீஸ் நிலையம் வரை டிரம்ஸ் வாத்தியத்துடன் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் குழந்தைகள் மீதான வன்முறை, பாலியல் அத்துமீறல் ஆகியவற்றை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஷாம்சுந்தர் மீனா, ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், தலைமை ஏட்டு முருகேசன், தனிப்பிரிவு தலைமை ஏட்டு ராஜா, குழந்தைகள் கடத்தல் மற்றும் தடுப்பு பிரிவு போலீஸ்காரர் கயல்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story