செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி


செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு

போதைப் பொருட்கள் ஒழிப்பு

உலக போதை எதிர்ப்பு தினத்தையொட்டி செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது கலைக் கல்லூரியில் இருந்து தொடங்கி புதிய பஸ் நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை போலிஸ் சூப்பிரண்டு பரத், கூடுதல் போலிஸ் சூப்பிரண்டு வேல்முருகன், உதவி கமிஷனர் சிராஜ் பாபு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு

இதைபோல கூடுவாஞ்சேரி போலீசார் சார்பில் நந்திவரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு மற்றும் போதைப் பொருள் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியானது நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை வழியாக நந்திவரம் ஜெய் பீம் நகர் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்து அடைந்தது. பேரணியில் மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.


Next Story