பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு


பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு
x

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பேரூ ராட்சி தலைவர் ஷாஜஹான் செயல் அலுவலர் மாலதி ஆகியோர் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத் தனர். இதில் பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியா ளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பவர் மற்றும் விற்பனை செய்வோர் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மேற்பார்வையாளர் சரவணன், அலுவலக பணியா ளர்கள் ராஜேஷ், குமார் உள்பட பேரூராட்சி பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story