எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
இன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
"அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதே போல பாமக நிறுவனர் ராமதாஸும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story