குருசடியில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


குருசடியில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x

குருசடியில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

பூதப்பாண்டி அருகே உள்ள நாவல்காடு மன்றார்புரம் பகுதியில் அன்னை வேளாங்கண்ணி மலங்கரை கத்தோலிக்க ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் அருகில் வேளாங்கண்ணி மாதா குருசடியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் அதே பகுதியை சேர்ந்த அருள் (வயது51) என்பவர் செயலாளராக இருந்து வருகிறார். சம்பவத்தன்று மாலையில் அருள் ஆலயத்தின் அருகில் உள்ள குருசடியின் கேட்டை பூட்டி விட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்தபோது கேட்டின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், குருசடியில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. உண்டியலில் ரூ.4,500 இருந்ததாக கூறப்படுகிறது. யாரோ மர்ம நபர் நள்ளிரவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஆலயத்தின் செயலாளர் அருள் பூதப்பாண்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story