அழகி போட்டி


அழகி போட்டி
x
தினத்தந்தி 20 Jun 2023 7:37 PM GMT (Updated: 21 Jun 2023 9:02 AM GMT)

நெல்லையில் அழகி போட்டி நடந்தது.

திருநெல்வேலி

அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் அழகிகள் போட்டி நெல்லை புதிய பஸ்நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில செயலாளர் ஷெரீப் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட தலைவர் அருணா அருண், துணைத் தலைவர் நாகஜோதி, செயலாளர் ஜோதிகனி, பொருளாளர் மலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் 5 வயது முதல் 50 வரை வயது வரையிலான பெண்களுக்கு 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள், 12 வயதிலிருந்து 18 வரையிலான பெண்கள், 3-வது பிரிவாக 50 வயது வரையிலான பெண்கள் பங்கேற்றனர்.

பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வகையில் மருதாணி வைத்தல், பாரம்பரிய உடை நவ நாகரிக உடை என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். திருமதி அழகு போட்டியில் நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்த டாப்னி வெற்றி பெற்றார். 2-வது இடத்தை அம்பையை சேர்ந்த தேவி தேர்வு செய்யப்பட்டார். இளம் அழகி மிஸ் அழகி போட்டியில் கல்லூரி மாணவிகள் அனாபாலன் முதலிடத்தையும், அபர்ணா 2-வது இடத்தையும் பிடித்தனர்.

அவர்களுக்கு கிரீடம் அணிவித்து பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. போட்டியின் நடுவர்களாக மாணவர்கள் உரிமை கழக தலைவர் நாஞ்சில் ராஜா, உணவு மற்றும் ஊட்டச்சத்து நல அலுவலர் முகமது சர்க்கரியா, குழந்தைகள் நல வளர்ச்சி அலுவலர் அருள் செல்வி, வருவாய் நீதிமன்ற கண்காணிப்பாளர் முருகேஸ்வரி, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி, வங்கி மேலாளர் சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.


Next Story