சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்ததால் விற்ற வீட்டை உரிமையாளரின் மனைவி உடைப்பு இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு


சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்ததால் விற்ற வீட்டை உரிமையாளரின் மனைவி உடைப்பு இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

ஆரணி அருகே சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்ததால் வீட்டை விற்று தலைமறைவான நிலையில் அவரது மனைவியே அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். இதனால் சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்களும் வீட்டை வாங்கியவரும் பூட்டை உடைத்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அருகே சீட்டு நடத்தி நஷ்டம் அடைந்ததால் வீட்டை விற்று தலைமறைவான நிலையில் அவரது மனைவியே அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். இதனால் சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்களும் வீட்டை வாங்கியவரும் பூட்டை உடைத்த பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீட்டு பணம்

ஆரணியை அடுத்த மொரப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஆரணி நகரில் மணிக்கூண்டு அருகாமையில் உள்ள பெரியார் மாளிகையில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வந்தார். அது மட்டுமல்லாமல் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களை வாடிக்கையாளர்களாக சேர்த்து மாத சீட்டுகள், வார சீட்டுகள் நடத்தி தவணை முறையில் பணம் வசூலித்து வந்தார்.

திடீரென அவர் ராட்டினமங்கலம் கூட்டு ரோட்டிற்கு இடத்தை மாற்றினார். அவருக்கு தற்போது அதிக அளவில் தொழிலில் பணம் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அந்த நபர் இ.பி.நகர் பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான வீட்டை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்று இருந்தார். அத்தொகையினை திரும்ப செலுத்த முடியாததால் ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவியின் கணவர் சரவணன் என்பவரை சந்தித்து தான் அடகு வைத்த வீட்டை விற்கப்போவதாக பேசியுள்ளார்.

அதன்படி இருவரும் ஒப்புக்கொண்டனர். அதில் குறிப்பிட்ட தொகை மட்டும் தன்னிடம் தருமாறும் மீதமுள்ள தொகையை அடகு வைத்த நிறுவனத்திடம் செலுத்தி விடுமாறும் கூறி வீட்டின் சாவியை ஒப்படைத்து சரவணன் பெயருக்கு ஒப்பந்தம் செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் பணத்தை வாங்கிய செல்வராஜ் அங்கிருந்து சென்று விட்டார்.

புகார்மனு

இதனிடையே செல்வராஜிடம் சீட்டு பணம் கட்டியவர்கள் முதிர்வு தொகை கிடைக்காததாலும் செல்வராஜ் தலைமறைவானதாலும் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

ஆரணி காந்தி ரோட்டில் உள்ள ராதாகிருஷ்ணனும் சீட்டு பணம் கட்டி ஏமாந்ததாக புகார் அளித்துள்ளார். மேலும் பலரும் இதுபோன்று புகார் அளித்துள்ளனர். அப்போது நீதிமன்றத்தில் சென்று முடித்துக் கொள்வதாக தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று செல்வராஜ் எழுதிக்கொடுத்த வீட்டின் பூட்டை உடைத்து அவரது மனைவி கோட்டீஸ்வரி உள்ளே சென்றார்.

தகராறு

இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அரையாளம் கிராமத்தில் உள்ள சரவணனுக்கும், பணத்தை இழந்த ராதாகிருஷ்ணனுக்கும் தகவல் தெரிவித்ததன் பேரில் ராதாகிருஷ்ணன் மற்றும் அரையாளம் கிராமத்தை சேர்ந்த சரவணனுக்கு ஆதரவாக சிலரும் அங்கு சென்று கோட்டீஸ்வரியிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள், கோட்டீஸ்வரிடம் எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு சென்று விசாரணையை முடித்துக் கொள்ளுங்கள் இதுபோன்று வீண் தகராறு செய்யக்கூடாது எனக் கூறி இரு தரப்பினரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் செல்வராஜின் மனைவி கோட்டீஸ்வரி வீட்டில் குடியேறினார்.

நோட்டீஸ்

தலைமறைவான செல்வராஜ் ஆரணியில் பலரிடம் பணம் பெற்று ஏமாற்றிய தொகை சுமார் ரூ.4 கோடி இருக்கும் என தெரிய வருகிறது. மேலும் செல்வராஜ் தற்போது வழக்கறிஞர் மூலமாக சீட்டு நிறுவனம் நஷ்டம் அடைந்து விட்டதாக மஞ்சள் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் தெரியவருகிறது. இந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story