போதை மாத்திரை தருவதாக பணத்தை வாங்கி ஏமாற்றியதால் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை - 3 பேர் போலீசில் சரண்


போதை மாத்திரை தருவதாக பணத்தை வாங்கி ஏமாற்றியதால் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை - 3 பேர் போலீசில் சரண்
x

போதை மாத்திரை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி ஏமாற்றியதால் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர்.

சென்னை

சென்னை கொருக்குப்பேட்டை, ஹரிநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ராகுல் (வயது19). நேற்று முன்தினம் இரவு இவர், பழைய கிளாஸ்பேக்டரி சாலையோரம் பலத்த கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். யாரோ மர்மநபர்கள் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியது தெரிந்தது.

உடனடியாக ராகுலை சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் ராகுல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆர்.கே .நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கொலை செய்தவர்கள் யார்? என விசாரித்து வந்தனர்.

இதற்கிடையில் இந்த கொலையில் தொடர்புடைய 3 பே ர், நேற்று அதிகாலை ஆர்.கே .நகர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். விசாரணையில் அவர்கள், கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சேர்ந்த சங்கர் என்ற கவுரி சங்கர் (25), கொருக்குப்பேட்டை, பென்சில் பேக்டரி சாலையைச் சேர்ந்த ரகுமான் (20), தண்டை யார்பேட்டையை சேர்ந்த சரவணன் (20) என தெரியவந்தது.

பின்னர் 3 பேரும் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

கொலையான ராகுல், கடந்த 15-ந் தேதி போதை மாத்திரைகள் வாங்கி தருவதாக கூறி எங்கள் 3 பேரிடமும் ரூ.20 ஆயிரம் வாங்கினார். ஆனால் சொன்னபடி போதை மாத்திரைகளையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள், பழைய கிளாஸ் பேக்டரி சாலைக்கு, ராகுலை வரவழைத்து நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டோம். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் 3 பே ரும் கத்தியால் ராகுலை சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டோம். இதில் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்து விட்டார். இவ்வாறு அவர்கள் வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story