கும்மிடிப்பூண்டியில் குடிபோதையில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து - நண்பர்கள் 2 பேர் கைது


கும்மிடிப்பூண்டியில் குடிபோதையில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து - நண்பர்கள் 2 பேர் கைது
x

கும்மிடிப்பூண்டியில் குடிபோதையில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்திய அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தை சேர்ந்தவர் கோகுல் (வயது 20). இவரது நண்பர்கள் டிராக்டர் டிரைவர்களான மங்காவரத்தை சேர்ந்த தினேஷ் (30), அப்பாவரத்தை சேர்ந்த பாஸ்கர் (34). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்திக்கொண்டிருந்தனர்.அப்போது ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக கோகுலிடம் மற்ற 2 பேரும் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோகுலை அவர்கள் பீர்பாட்டிலால் குத்தினர். முகம், மார்பு என உடல் முழுவதும் பலத்த காயம் அடைந்த கோகுல் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

‌‌இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை பீர்பாட்டிலால் குத்திய தினேஷ் மற்றும் பாஸ்கரை நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story