முத்தரப்பு ஒப்பந்தத்தை வலியுறுத்தி பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்


முத்தரப்பு ஒப்பந்தத்தை வலியுறுத்தி பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
x

முத்தரப்பு ஒப்பந்தத்தை வலியுறுத்தி பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள், அலுவலர்கள், பொறியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோரின் எதிர்கால பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய வகையில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள வலியுறுத்தியும், ஊதிய உயர்வு, பஞ்சப்படி, புதிய பணி நியமனங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் ஜோதி வரவேற்றார். திட்ட அமைப்பு செயலாளர் செங்குட்டுவன், மாநில செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். இதில் திட்ட துணைத்தலைவர் அமல்ராஜ், துணை செயலாளர்கள் சத்யா, கோபாலகிருஷ்ணன், கோட்ட செயலாளர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் திட்ட ஆலோசகர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


Next Story