பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான லஞ்ச வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் மீதான லஞ்ச வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x

மேலும் கல்வி நிலையங்கள் மீது நம்பகத்தன்மையை குறைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது .

சென்னை,

பேராசிரியர் நியமனத்துக்கு லஞ்சம் பெற்றதாக பாரதியார் பல்கலை. முன்னாள் துணைவேந்தர் முன்னாள் துணை வேந்தர் கணபதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் துணை வேந்தர் கணபதி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது . அதில் வழக்கை ரத்து செய்ய மறுத்து மனுவை சென்னை ஐகோர்ட்டு'தள்ளுபடி செய்தது மேலும் கல்வி நிலையங்கள் மீது நம்பகத்தன்மையை குறைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனவும் சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது .


Next Story