ரூ.49 லட்சத்தில் நூலகம் கட்ட பூமிபூஜை


ரூ.49 லட்சத்தில் நூலகம் கட்ட பூமிபூஜை
x
தினத்தந்தி 22 Sep 2022 7:15 PM GMT (Updated: 2022-09-23T00:45:52+05:30)

அதியமான் கோட்டத்தில் ரூ.49 லட்சத்தில் நூலகம் கட்ட பூமி பூஜை நடந்தது.

தர்மபுரி

நல்லம்பள்ளி:-

நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்ட வளாக பகுதியில் ஈரடுக்கு நூலக கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. மாவட்ட கவுன்சிலர் மாது சண்முகம் தலைமை தாங்கினார். கலெக்டர் சாந்தி, டாக்டர் செந்தில்குமார் எம்.பி., எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ரூ.49 லட்சம் மதிப்பீட்டிலான ஈரடுக்கு மேம்பால பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் யசோதா, யூனியன் தலைவர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா, யூனியன் கவுன்சிலர் முருகன், தி.மு.க ஒன்றிய செயலாளர் சண்முகம், பஞ்சாயத்து தலைவர்கள் மாரியம்மாள், ஆறுமுகம், கலைச்செல்வன், இண்டூர் கூட்டுறவு வங்கி தலைவர் பெரியண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக பூமி பூஜை செய்தவற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது செங்கற்களில் மஞ்சள், குங்குமம் இடப்பட்டு இருந்ததாக தெரிகிறது. இதனை கண்ட செந்தில்குமார் எம்.பி., ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளிடம் அரசு நிகழ்ச்சிகளில் இதுபோன்று செய்யக்கூடாது என்று எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் என்று கோபத்துடன் கூறியதாக தெரிகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story