மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x
தினத்தந்தி 22 Jun 2023 12:30 AM IST (Updated: 22 Jun 2023 10:53 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சின்னமஞ்சவாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 30). இவர் சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 மாதமாக சேலம் செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கோம்பூரில் உள்ள தமிழ்மணி என்பவரின் வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு பஸ் ஏறி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதே போன்று கடந்த மார்ச் 23-ந் தேதி நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் நேற்று பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்


Next Story