தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு


தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைப்பு
x

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னை,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் இன்று நிறைவேறி உள்ளது.

சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் இன்று சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத் துறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு இன்றே அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களும் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சட்டசபையில் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டு அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பும் பட்சத்தில் அதே மசோதா மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story