பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைத்து போட்டி - டி.டி.வி. தினகரன் பேட்டி


பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைத்து போட்டி - டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2024 12:11 PM GMT (Updated: 11 March 2024 12:16 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவளிப்பதாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.ம.மு.க. போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.ம.மு.க. போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவளிக்கும். அ.ம.மு.க.வின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பா.ஜ.க.விடம் கொடுத்து விட்டோம். தாமரைச் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று எங்களுக்கு பா.ஜ.க. எந்த நிர்ப்பந்தமும் கொடுக்கவில்லை.

தொலைபேசி வாயிலாக அண்ணாமலை, பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர்கள் என்னிடம் பேசினர். எத்தனை தொகுதிகள் என்பது எங்களுக்கு பிரச்சினை இல்லை. தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில் ஆதரவு கொடுக்கிறோம். பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்து, மோடி மீண்டும் பிரதமராவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story