இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது


இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது
x

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

சனாதனம் பேச்சு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபுவை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் வடக்கு 3-ம் வீதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஏற்கனவே ஈடுபட்டிருந்தனர். ஊர்வலமாக வந்த பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரிடம் பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோரிக்கை தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு பா.ஜ.க. மேற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். இதில் பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.


Next Story