பா.ஜ.க.கண்டன ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலத்தில் பா.ஜ.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிர்வாகி சீத்தாராமன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் மில்.ஹரி,கலைவேந்தன், மாவட்ட தலைவர் கலைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்க தவறிய தமிழக அரசை கண்டிப்பது, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வர்த்தக பிரிவு கண்ணன், சேகர், மஞ்சமுத்து, பாலமுருன், ராஜசேகர், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சங்கராபுரம்
இதேபோல் பா.ஜ.க. சார்பில் சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கராபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஒன்றிய பொது செயலாளர் கோவிந்தன், ஒன்றிய துணை தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மக்கள் நலனுக்கு எதிராகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் தி.மு.க. செயல்பட்டு வருவதாக கூறி அதனை கண்டித்து பா.ஜ.க.வினர் கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் ராஜேஷ், பிரகாஷ், செந்தில், யோகசெல்வம், ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.