பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வந்தவாசி
வந்தவாசி நகரம் மற்றும் வந்தவாசி மேற்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் வந்தவாசி தேரடியில் இன்று நடைபெற்றது. நகர தலைவர் ஆர்.சுரேஷ் தலைமை தாங்கினர்.
வந்தவாசி மேற்கு ஒன்றிய தலைவர்கள் என்.நவநீதி, ஆவனவாடி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய பொதுக்குழு உறுப்பினர் பி.பாஸ்கரன், மாவட்ட பொதுச் செயலாளர் பி.முத்துசாமி, முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.ஜி.துரை, மாவட்ட செயலாளர் வி.குருலிங்கம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசைக் கண்டித்தும் கோஷமிட்டனர்.
இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொதுச் செயலாளர் முரளி நன்றி கூறினார்.