பா.ஜ.க. செயற்குழு கூட்டம்


பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
x

கீழ்பென்னாத்தூரில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர

கீழ்பென்னாத்தூரில் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் வடக்கு ஒன்றிய தலைவர் பாவேந்தன் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச் செயலாளர் வினோத்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் கோட்ட அமைப்பு செயலாளர் குணசேகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், அனைத்து கிராமங்களிலும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும்.

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூற வேண்டும், வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான முறையில் பணியாற்றி மீண்டும் பா.ஜ.க. ஆட்சி வருவதற்கு பாடுபட வேண்டும் என்றார்.

கூட்டத்தில், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் புதிய கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகளை துரிதமாக அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் ஒன்றிய பொதுச் செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

இதில் முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் பிச்சாண்டி, சிறுபான்மை பிரிவு ஒன்றிய தலைவர் இப்ராகிம், பிரசாரக்குழு ஒன்றிய தலைவர் இளவரசன், வடக்கு ஒன்றிய செயலாளர்கள் பாலு, முத்துக்குமரன், ஒன்றிய துணைத் தலைவர்கள் முருகன், சிவப்பிரகாசம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story