பா.ஜ.க. செயற்குழு கூட்டம்
கீழ்பென்னாத்தூரில் பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய தலைவர் பாவேந்தன் தலைமையில் கீழ்பென்னாத்தூரில் நடந்தது.
மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் அண்ணாமலை, முன்னாள் ராணுவ பிரிவு ஒன்றிய தலைவர் சேகர், ஒன்றிய பொதுச் செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய பார்வையாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைத் தலைவர் பழனி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பா.ஜ.க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகளை கிராமங்கள் தோறும் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
கூட்டத்தில் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கடம்பை ஊராட்சி 3-வது வார்டில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும். ராயம்பேட்டை ஊராட்சியில் சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்ேவறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றிய பொறுப்பாளர் ஏழுமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துகிருஷ்ணன், விஜயகுமார், ராஜேந்திரன், ஒன்றிய துணைத்தலைவர்கள் சிவப்பிரகாசம், முருகன், கிளை தலைவர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஒன்றிய துணைத்தலைவர் முருகன் நன்றி கூறினார்.