சென்னை அமைந்தகரையில் பா.ஜ.க. நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் திறப்பு
பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் குழுக்கள் அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை அமைந்தகரையில் பா.ஜ.க. நாடாளுமன்ற தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தலைமை தேர்தல் அலுவலகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். தேர்தல் அலுவலகம் இணையதள வசதி, கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தேர்தல் அலுவலகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story