சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. ஆட்சியில் எந்த நன்மையும் செய்யவில்லை; பா.ஜ.க. தேசிய செயலாளர் பேட்டி
சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. ஆட்சியில் எந்த நன்மையும் செய்யவில்லை என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் வேலூர்இப்ராகிம் கூறினார்.
பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர்இப்ராகிம் திருச்சியில் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், திருச்சியில் மதுபான கேளிக்கை நடனவிடுதியை எதிர்த்து போராட்டம் நடத்திய பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தது ஜனநாயகத்தை முடக்கும் செயல். காவல்துறையின் இந்த அடக்கு முறைக்கு பா.ஜ.க.வினர் அஞ்சமாட்டோம். டிசம்பர் 6-ந் தேதி மதுரையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என சிலர் அறிவித்துள்ளனர். இதனை எதிர்த்து பா.ஜ.க. சிறுபான்மை அணியை சேர்ந்த இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் அணி திரண்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் முன்பு அரணாக நின்று பாதுகாப்போம். பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ.க. எதிராக இருப்பதாக வதந்தி பரப்பி வருகிறார்கள். சிறுபான்மை மக்களுக்கு தி.மு.க. ஆட்சியில் எந்த நன்மையும் செய்யவில்லை, என்றார்.