டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பா.ஜ.க.வினர் போராட்டம்


டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பா.ஜ.க.வினர் போராட்டம்
x

டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பா.ஜ.க.வினர் போராட்டம் நடந்தது.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள பாரப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி பா.ஜ.க. சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், அரசு மதுபானப்பிரிவு மாவட்ட உதவி மேலாளர்கள் மதிவாணன், சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேர்ந்த 47 பேரை போலீசார் கைது செய்து, தரகம்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Next Story