கோவிலை கட்டி மக்களை ஏமாற்ற பார்க்கிறது பாஜக - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பாஜக அரசு ராமர் கோவிலை காட்டி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது. என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை அமைந்தகரையில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது,
மொழிக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கத்தை செலுத்துகிறேன். மொழிப்போர் களத்தில் தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் முன்நின்றனர். தமிழுக்காக உயிர் நீத்தவர்கள் தான் மொழிப்போர் தியாகிகள்.இந்தி திணிப்பை எதிர்த்து 12 வயதில் களத்தில் நின்றவர் கருணாநிதி
பிரதமர் மோடி தொடர்ந்து இந்தித் திணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றார். தமிழன் என்று சொல்லுடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற இறுமப்புடன் இருக்கின்றேன்.
கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர் தொழிலாளர்களை கைவிட்ட பாஜக அரசுதான் கொரோனாவை விட கொடூரமானது. பாஜக அரசு ராமர் கோவிலை காட்டி மக்களை ஏமாற்றப் பார்க்கிறது . என தெரிவித்தார்.
Related Tags :
Next Story