தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்


தமிழக அரசை கண்டித்து பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம்
x

பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் திமுக ஆட்சியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதன்படி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது.


Next Story