பாம்பனில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பாம்பனில் பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமேசுவரம்,
மண்டபம் கிழக்கு ஒன்றியம் பா.ஜனதா சார்பில் பாம்பன் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் மற்றும் மணல் கொள்ளையை அரசு உடனடியாக தடுக்க வலியுறுத்தியும் பாம்பன் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மண்டபம் கிழக்கு ஒன்றிய தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் பவர் நாகேந்திரன், மாவட்ட இளைஞரணி தலைவர் மோடி முனீஸ், மண்டபம் ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்கள், ரவி, ஓ.பி.சி.அணி மாவட்ட செயலாளர் செந்தில் கணேஷ், மண்டபம் ஒன்றிய பொதுச் செயலாளர் மெய் கண்ட மூர்த்தி, ராமேசுவரம் நகர் தலைவர் ஸ்ரீதர், நகர் பொதுச்செயலாளர்கள் முருகன், நம்புச் செல்வம், நகர் பொருளாளர் சுரேஷ், நகர் துணைத் தலைவர் சின்ன கருப்பையா, கலை மற்றும் கலாசார பிரிவு மாவட்ட தலைவர் ராமநாதன், நகர் இளைஞர் அணி தலைவர் ஞான குரு, ஆறுமுகலிங்கம், மீனவர் அணி தலைவர் கருப்பசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.